Thursday, November 8, 2012


தீபாவளி கொண்டாடலாமா? - 1

தீபாவளியை இன்றைக்கு சிலர்… சில ஊடகங்கள் தீபஒளி என மாற்றி அழைக்கின்றன. இது சரியா என்பதற்கு முன்னால், தீபாவளி என்பது பற்றிப் பார்க்கலாம். தீப+ஆவளி என்பதுதான் தீபாவளியானது. நாமாவளி போன்றது. ஆவளி என்றால் வரிசை என்று அர்த்தம்.

தீபங்கள் வரிசையாக இருப்பது தீபாவளி.                                                      
நாமங்கள் வரிசையாக இருப்பது நாமாவளி.

வெடிகளை வெடிக்கும் திருவிழாவுக்கும் விளக்குகளுக்கும் என்ன தொடர்பு? விளக்குகளை வரிசையாக வைப்பதற்கும் நரகாசுரனுக்கும் என்ன தொடர்பு? எதுவும் கிடையாது. இவை எல்லாம் பின்னால் இட்டுக்கட்டி சொல்லப்பட்ட கதைகள். 
வெடித்தொழிற்சாலைகள் உருவாகி வளர்ந்த நூறு ஆண்டுகளுக்குள் தான் தீபாவளிக்கும் வெடிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. விளக்கு ஏற்றி வழிபடுவது, விளக்கு ஏற்றி ஒரு செயலைத் தொடங்குவது, குடும்பத்தை வாழையடி வாழையாக தழைக்கச் செய்வதற்கு வரும் பெண்ணுக்கு “விளக்கு ஏற்ற வந்த மகராசி”  இவை எல்லாம் தமிழ் சமூகத்தின் பெருந்திரள் உளவியல்.
தமிழர்களின் இந்த மனப்பாங்கை சமஸ்கிருத மயமாக்கி மாற்றம் செய்து உருவானதுதான் தீபாவளி. இதனை எப்படி மாற்றினார்கள்? எதற்காக மாற்றினார்கள்? அடுத்து பார்க்கலாம்.