Sunday, April 29, 2007

அனைவரிடமும் கைபேசி

அனைவரிடமும் கைபேசி

இன்னும் சில ஆண்டுகள் கடந்துவிட்டால், சாதாரண மக்கள் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளைப் பெறுவது கடினமாக இருக்கும். ஏனென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கம்பிவடமில்லாத(ஒயர்லெஸ்) இணைப்புகளை விரிவாக உருவாக்கிக் கொண்டு வருவதால், இனிமேல் கம்பிவட(கேபிள் லைன்) இணைப்புகளை உருவாக்குவதற்காக பணத்தைச் செலவிடப்போவதில்லை. ஆனால் இத்தகைய வசதிகள் உள்ள கைபேசிகளின் விலை கூடுதலாக இருப்பதால் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இல்லாமல் உள்ளது.

செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியானது, கைபேசி உற்பத்தியாளர்களுக்கு கைகொடுத்துள்ளது. ரூ.1000-1500/- வரையிலான விலையில் அனைத்து வசதிகளும் கொண்ட கைபேசிகளை சந்தைப்படுத்த உள்ளனர். இன்றைக்கு இத்தகைய வசதிகொண்ட கைபேசிகள் ரூ.4000/- மும் அதற்கும் மேல்தான். கைபேசிகளின் மூளை போன்று இருக்கக் கூடியது 'சிப்'புகளாகும். இந்த சிப்புகளில் மிகநுட்பமான பல்வகையான பணிகளையும் செய்யக்கூடிய நுண்சிப்புகளை தெக்சாஸ் இன்ஸ்ட்ரூமன்ட்ஸ், குவால்காம் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
அண்மையில் மோட்டாரோலா நிறுவனம் ரூ.2000 விலை மதிப்புள்ள கைபேசியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. இதில் டிஐ சிப்புகளைப் பயன்படுத்தி இருந்தனர். இதுபோன்ற தயாரிப்புகள் வரவர சாதாரண மக்களும் எளிதாகப் பயன்படுத்த முன்வருவதோடு கைபேசி பயனாளர்களின் எண்ணிக்கையும் பெருகும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

சிக்கல்: கைபேசிகளைப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு அதன் விலை ஒரு தடையாக இருக்கும் போல உள்ளதே!

தீர்வு: மலிவான விலை; எளிதான கைபேசிக் கருவிகள்

புதிய கண்டுபிடிப்புகள் பற்றி பட்டியலிட்டுள்ள 'சிஎன்என் மணி' வலைத்தளத்தில் இருந்து தமிழில்...

Saturday, April 14, 2007

மூளை-எந்திரம் இணைப்புக்கான இடைமுகம் (Brain Machine Interfaces)

நாம் ஒரு வேலையைச் செய்யும்போது நம்முடைய மூளைக்குள் என்ன மாதிரியான மின்குறியீடுகள்(சிக்னல்கள்) பரிமாறப்படுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வது, அடுத்து அதே முறையில் மனித மூளைக்கும், எந்திரங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி, மூளையில் நினைத்தவுடன், தானாக வெளியில் உள்ள கணிப்பொறியோ, எந்திரமோ செய்திட வேண்டும். இது பற்றிய ஆராய்ச்சிக்கு மூளை-எந்திரம் இணைப்புக்கான இடைமுகம் (Brain Machine Interfaces) என்கின்றனர். இதுபற்றி ஆராயும் ஒரு சில அறிவியலார்களில் ஒருவர் மிகுவெல் நிகோலலிஸ்.
மனித மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆராய்ந்து அந்த அறிவைக்கொண்டு, மனித மூளைக்குள் வைக்கும் அளவுக்கு சில உள்ளீட்டுப்பொருள்களைத் (implants) தயாரித்து, அதன் மூலம் வெளியே இருக்கும் கணிப்பொறிகளையும் எந்திரங்களையும் இயக்குவது. இதெல்லாம் இந்த ஆராய்ச்சி மூலம் செய்யக்கூடியவை.
நிகோலலிஸ் இந்த அமைப்பை 'வீரியஒட்டு மூளை எந்திர இணைப்பு இடைமுகம் ' (Hybrid brain machine interfaces HBMI ) என்று சொல்கிறார்.
இன்னும் மூளையில் இருக்கும் கோடிக்கணக்கான நியூரான்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அந்த நியூரான்கள் எவ்வாறு செய்திகளை உற்பத்தி செய்கின்றன அவற்றை எப்படி மற்றவற்றுக்குத் தெரிவிக்கின்றன என்பது நிகோலலிஸ் போன்ற பல மூளை நரம்பியல் வல்லுநர்களுக்கு தெரியாது. எப்படி வண்ணங்கள் நியூரான்களால் அறிந்துகொள்ளப்படுகின்றன? வாசனைகள் எப்படி நியூரான்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றன? என்பது எதுவும் தெரியாது.
'இப்படித்தான் மூளை இயங்குகிறது என்று சொல்லக்கூடிய மூளை பற்றிய முழுமையான வரைபடமோ விவரமோ நம்மிடம் இல்லை. உத்தேசமாக இங்கே இது நடக்கிறது என்பதே தெரிந்துள்ளது' என்கிறார் நிகோலலிஸ்.